நமது சமுதாயத்தின் விடிவெள்ளி தியாகி இமானுவேல் தேவேந்திரருக்கு ஒரு அடையாளச் சின்னமாகவும் அதேசமயத்தில் சமுதாய மக்கள் முன்னேற்றத்திற்கு பயன்படும் விதமாகவும் சென்னை நுழைவு வாயில் வண்டலூரில் ஒரு மாபெரும் கட்டிடம் கட்ட உலகெங்கிலும் வாழும் தேவேந்திரர்களின் மிகுந்த வரவேற்புடன் தேவேந்திரகுல நலச்சங்கம் - தாம்பரம் முன்னெடுத் திருக்கிறது . இதற்கான அடிக்கல் நாட்டுவிழா 26.01.2020 அன்று நடைபெற்றது என்பது அனைவரும் அறிந்ததே.
தாம்பரம் வட்டார தேவேந்திரகுல நலச்சங்கமானது 1990 ல் தற்போதைய சங்கத்தலைவர் திரு செல்லத்துரை அவர்கள் குரோம்பேட்டைக்கு குடியேறியவுடன் தாம்பரம் பகுதியில் வாழும் தேவேந்திரர்களை அடையாளம் கண்டு தாம்பரம் மார்க்கெட்டில் அரசிக் கடை வைத்திருந்த திரு புஷ்பராஜ் அவர்களை மருத்துவர் மதிவாணன் போன்றோருக்கு அறிமுகப்படுத்தி, திரு செல்லத்துரை அவர்களின் முயற்சியால் திரு புஷ்பராஜ் அவர்களை தலைவராக தேர்ந்தெடுத்து 1993 ல் தொடங்கப்பட்டது.
சென்னையில் வாடகை வீடுகளில் வசிக்கும் நமது மக்களை வீட்டு உரிமையாளராக ஆக்க வேண்டும் என்ற எண்ணத்தில் 1995 ம் ஆண்டு அன்னை இந்திராகாந்தி கூட்டறவு வீடு கட்டும் சங்கம் என்று ஏற்படுத்தி அதன் மூலம் 6 ஏக்கர் 10 சென்ட் நிலம் வாங்கி 91 மனைகளாகப் பிரித்து தேவேந்திரர் நகர் என்று பெயரிட்டு பணம் கொடுத்த உறவுகளுக்கு அங்கீகாரம் பெற்ற நபர்களான அப்போதைய தலைவர் திரு புஷ்பராஜ் மற்றும் மறைந்த திரு சண்முகையா அவர்களால் பத்திரப்பதிவு செய்யப்பட்டது. அதில் பொது இடமாக ஒரு பழைய கட்டிடத்துடன் 15,353 சதுர அடி தேவேந்திரகுல நலச்சங்கத்தின் பெயரில் எழுதி வைக்கப்பட்டது மனை வாங்கிய நபர்கள் ஒவ்வொருவராக வீடு கட்ட ஆரம்பித்தனர். தேவேந்திர குல நலச்சங்கம் சார்பாக தேவேந்திரர் நகர் நிலம் வாங்கிய தருணத்தில் I.R.S அதிகாரி திரு முருகன் அவர்கள் நிதி பங்களிப்பால் குடும்ப விழா நடத்தப்பட்டது. அதில் பசுபதிபாண்டியன் அவர்கள் மற்றும் சமுதாயத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
2004 ம் ஆண்டு வேளச்சேரி சங்க ஆண்டுவிழா தேவேந்திரர் நகர் இடத்தில் நடைபெற்றது . இந்த விழாவில் “மூவேந்திரர் யார்” நூலாசிரியர் தேவ ஆசிர்வாதம் அவர்கள் கலந்து கொண்டார்.
2010 ம் வருடம் தேவேந்திரர் நகர் அருகில் உள்ள மேம்பால சர்வீஸ் சாலைக்கு இடம் தேவைப்பட்டதால், சங்கத்தின் பெயரில் இருந்த. 3547 சதுர அடி நிலத்தை அரசு கையகப்படுத்தியது. அப்போதைய சங்கத்தலைவர் திரு புஷ்பராஜ் அவர்களின் சில நடவடிக்கைகளால் அரசு கையகப்படுத்திய நிலத்திற்கான இழப்பீட்டுத் தொகையை வாங்க முடியாமல் தேக்க நிலை ஏற்பட்டது . சங்கத்தின் ஆரம்பகாலத் தலைவர் திரு புஷ்பராஜ் அவர்களின் மறைவிற்குப் பின் புதிய நிர்வாகிகளாக 23.05.2015 ல் திரு.செ. செல்லத்துரை தலைவராகவும் திரு டி.கே.ஆர் குருசாமி அவர்கள் அவைத் தலைவராகவும் திரு மருத்துவர் சு. மதிவாணன் செயலாளராகவும் திரு டி.கே. குமார் பொருளாளராகவும் மற்ற ஏனைய நிர்வாகிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிய நிர்வாகிகளின் பெரும் முயற்சியால் தமிழக அரசிடமிருந்து சங்க இடத்தை கையகப்படுத்திய இடத்திற்கு இழப்பீட்டு தொகையாக ரூபாய் 43,09,93 க்கான காசோலை 15.07.16 அன்று பெறப்பட்டது . காசோலை பணத்தை அப்படியே காஞ்சிபுரம் கூட்டுறவு வங்கியில் வைப்புத் தொகையாக வைக்கப்பட்டது . இப்போது இந்த வைப்பு தொகை வட்டியுடன் ரூ 53 லட்சமாகி சங்க கட்டுமான பணிக்கு பயன் படுத்தாகியாச்சு.
இந்த மொத்த மனைப்பிரிவுகளும் அங்கிகரிக்கப்படாத மனைகளாக இருந்தன. மனு உரிமையாளர்கள் தனித்தனியே வரைமறைப்படுத்திக் கொண்டனர். 2017ம் ஆண்டு தமிழக அரசால் கொண்டு வரப்பட்ட வீட்டு மனைகள் வரைமுறை படுத்துதல் சட்டத்தின்படி தற்போதைய சங்க நிர்வாகிகளின் அயராத முயற்சியில் சங்கத்தின் பெயரில் உள்ள இடத்திற்கு மனை எண் 92 ஆக வரைமுறைப் படுத்தப்பட்டது . பின்னர் கட்டிட அனுமதி கோரும் போது ஒரு சிறு பிரர்ச்சினையை எதிர்கொள்ள வேண்டியதாகிவிட்டது. தலைமைச் செயலகத்தில் வேலைசெய்யும் நமது உறவுகளின் வழிகாட்டுதலின்படி கட்டிடத்திற்கு முறையான அனுமதி பெற்றாகி விட்டது.
2015 ம் ஆண்டு சென்னையில் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரப்பணியில் சங்கத்தலைவர் திரு செல்லத்துரை தலைமையில், துணைத் தலைவர் லயன் பூ.சிவகுமார் ஒருங்கிணைப்போடு சங்க நிர்வாகிகள் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டனர்.
2015 ம் வருடம் மருத்துவ சகோதரர்கள் அன்பழகன் மற்றும் மதிவாணன் ஆகியோருக்கு அரசுப்பணி ஓய்வு பாராட்டுவிழா நடைபெற்றது . இவ்விழாவில் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை எம்ஜிஆர் நகரில் வசிக்கும் அருள்சாமிக் குடும்பருக்கு தள்ளு வண்டி வாங்க ரூபாய் 10000 வழங்கப்பட்டது.
நமது சமுதாயத்தில் தகுதியுள்ள ஏழை மாணவர்களுக்கு சங்கத் தலைவர் திரு செல்லத்துரை அவர்களின் முயற்சியால் நமது சமுதாய வாட்ஸ் அப் குழுக்கள் மூலம் உதவிகள் செய்து வருகிறது.
முதலாவதாக நாமக்கல் மாவட்டத்தைச் சார்ந்த சரவணன் என்ற பார்வையில்லாத மாணவருக்கு மத்திய அரசு ஆட்சிப் பணித் தேர்வு பயிற்சிக் கட்டணம் மற்றும் தங்கும் வசதிக்காக இரு வருடங்களாக வேண்டிய நிதி உதவி கொடையுள்ளம் கொண்ட நமது உறவுகள் பயனாளியின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வைத்தனர். இதே மாணவருக்கு கொடையாளர் திரு செங்கோல் முருகன் அவர்களால் நல்ல தரம் வாய்ந்த ஒரு லேப்டாப்பும் வழங்கப்பட்டது.
சுகன்யா என்ற பாலாஜி மருத்துவக் கல்லூரி மாணவிக்கு மூன்றாம் ஆண்டு படிக்கும் போது அவருடைய தந்தையாரின் திடீர் மறைவால் மேற்கொண்டு படிப்பை தொடர முடியாத நிலையில் திரு செல்லத்துரை அவர்களின் முயற்சியால் வாட்ஸ் அப் குழு உறவுகள் படிப்பைத் தொடர அவருடைய வங்கிக் கணக்கில் விடுதிக்கட்டணத்திற்கு தேவையான பணத்தைச் செலுத்தினர். மேலும் மருத்துவப்படிப்பிற்கான ரூபாய் 25000 பெறுமான புத்தகங்கள் வாங்கி கொடுக்கவும் கொடையாளர் திரு ரவிச்சந்திரன் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது. இப்போது இந்த மாணவி பாலாஜி மருத்துவக்கல்லூரியில் பயிற்சி மருத்துவராக பணிபுரிகிறார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்த மிக ஏழைக் குடும்பத்தைச் சார்ந்த செல்லப் பாண்டி என்ற மாணவருக்கு சென்னை மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்திருப்பதாக செய்திதாள்கள் மூலம் அறிந்து திரு செல்லத்துரை அவர்கள் அந்த மாணவனுடன் வாட்ஸ் அப் குழுக்கள் மூலம் தொடர்பை ஏற்படுத்தி அந்த மாணவனுக்கு வேண்டிய ஒராண்டிற்கான் டிரஸ் சென்னையில் உள்ள உறவு ஒருவர் மூலம் வாங்கி கொடுத்து சென்னையில் நாங்கள் உதவிசெய்ய இருக்கிறோம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தினோம் . திரு செல்லத்துரை அவர்களின் வாட்ஸ் அப் செய்தி மூலம் சமூக சிந்தனையாளர் திரு ரவிச்சந்திரன் அவர்கள் இந்த மாணவருக்கு லோக்கல் கார்டியன் இருந்து வருகிறார் . இந்த மாணவன் இப்போது மூன்றாம் ஆண்டு நல்ல முறையில் படித்து வருகிறார்.
காஜா புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூர் , நாகை மாவட்ட தேவேந்திர மக்களுக்கு டாக்டர் அன்பழகன் தலைமையில் உள்ளூர் புதிய தமிழக கட்சி நிர்வாகிகளின் ஒத்துழைப்போடு மருத்துவ முகாம்கள் நடத்தி தேவையான மருந்துகளும் பெட்சீட் போன்ற பொருட்களும் வழங்கப்பட்டன.
நமது சமுதாயத்தைச் சார்ந்த சாதனை புரிந்த விளையாட்டு வீரர்கள் அருமைத்தம்பிகள் தேவேசித்தம் , இர்சத்குமார் மற்றும் இசக்கிமுத்து ஆகியோருக்கு சங்கத் தலைவர் திரு செல்லத்துரை அவர்களின் வாட்ஸ்அப் பதிவால் இவர்களுக்கு தேவையான நிதி நமது உறவுகளின் பங்களிப்பு மூலம் நேரிடையாக பயனாளிகளின் வங்கிக் கணக்கிற்கு சென்றடைந்தது. .
இந்தத் தருணத்தில் சங்கத்தலைவர் மதிப்பிற்குரிய திரு.செல்லத்துரை அவர்களின் அழைப்பை ஏற்று வாட்ஸ் அப் மூலம் நமது ஏழை மாணவர்களுக்கும் சாதனையாளர்களுக்கும் உதவி செய்த கொடையுள்ளம் கொண்ட உறவுகளுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கடந்த நான்கு ஆண்டுகளாக தியாகி இமானுவேல் வீர வணக்க நாள் இச்சங்கத்தில் நடத்துகிறோம்.
மேலும் சங்கத் தலைவரின் ஒருங்கிணைப்பால் அரபு நாடுகளில் வேலை பார்க்கும்போது திடீர் மரணம் அடைந்த இதுவரை 4 பேர் உடல்கள் தாயகம் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டது.
இன்றைய தினம் 23.11.2020 நெலலை மாவட்டம் தென்கலம் புதூர் ஏழ்மையான தகப்பனாரை இழந்த ஏழை மாணவி செல்வி பகவதி மருத்துவக் கல்லூரி சேர இருப்பதாக செய்தித் தாள் மூலம் அறிந்து வாட்ஸ் மூலம் நமது உறவு மருத்துவர்கள் மூலம் அந்த மாணவிக்கு வேண்டிய உடைகள் சிறிய மருத்துவ உபகரணங்கள் மற்றும் புத்தகங்கள் வாங்க நிதி பங்களிப்பிற்கு வேண்டிய ஏற்பாடு நடந்து கொண்டிருக்கிறது.
சங்கத் தலைவர் சென்னைத் துறைமுகத்தில் சாதாரண மேற்பார்வையாளராக பணியாற்றதிலிருந்து தலைமைப் பொறியாளராக ஓய்வு பெறும் வரை பலருக்கு எந்தவித பணபலன் எதிர்பார்க்கலாம் வேலை வாய்ப்பு மற்றும் காண்டிராக்ட் மற்றும் சிலர் எம்.பி.ஏ படிக்கும் போது Project Report ற்கு வெளி வழிகாட்டியாக ( External Guide ) ( MBA Project செய்தவர்கள் இன்று அமெரிக்காவில் வேலை செய்கிறார்கள் ) உதவி செய்திருக்கிறார்.
நிறைய பேருக்கு பொறியியல் படிக்கும் போது Industrial training ஏற்பாடு செய்திருக்கிறார். .
இவருடைய துறைமுக குடியிருப்பு முகவரியைப் பயன்படுத்தி வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பல் வேறு அரசு சார்ந்த நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்றவர்கள் கணக்கில் அடங்கா. இவருடைய சிறிய கிராமமான கப்பிகுளத்திலிருந்து ஏறக்குறைய பத்து குடும்பங்கள் சென்னை இடம் பெயர்வதற்கு உந்து சக்தியாக இருந்தவர்.
இவருடைய முயற்சியால் இந்தியன் ஆயில் அதிகாரிகளின் வழிகாட்டுதலின் படி சென்னையில் ஒருவர் இன்டேன் கேஸ் ஏஜென்சியும் ஒருவர் இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்கும் வைத்திருக்கிறார்கள். இதில் பெட்ரோல் பங்கு வைத்திருப்பவர் சமுதாய நிகழ்வுகளுக்கு தானாகவே முன் வந்து உதவி செய்து வருகிறார் . கேஸ் ஏஜென்சி வைத்திருப்பவர் எந்த உதவியும் செய்வதில்லை என்பது மன வருத்தம் அளிக்கிறது
1995 ல் கொடியன்குளத்தில் காவல்துறையின் அராஜகம் நடந்தபோது பல்வேறு நடவடிக்கைகள் எடுப்பதற்கு சமுதாய மக்களுடன் இணைந்து பணியாற்றியவர்.இறுதியாக 1995 அக்டோபர் 6ந்தேதி டாக்டர் கே.கிருஷ்ணசாமி அவர்கள் தலைமையில் சென்னையில் நடந்த கண்டனப் பேரணிக்கு சங்கத் தலைவர் மற்றும் அட்வகேட் சண்முகவேலுவிற்கும் முக்கிய பங்கு உண்டு என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்
சென்னை பெரம்பூர் சங்கம், ஆவடி தேவேந்திரர் பேரவை சகோதரர் மறுமலர்ச்சி நலச்சங்கம் ஆகிய சங்கங்கள் நிலம் வாங்குவதற்கும் சங்கத் தலைவரின் முக்கிய பங்கு உண்டு.
சிலர் உதவிக்கு வந்த போது முயற்சி செய்தும் முடியாமல் இருக்கலாம். அப்படி முடியாது போனால் சிலர் தலைவர் மீது குறை கூறலாம்.
தலைவர் பதவியில் இருந்த காலத்திலும் ஓய்வு பெற்ற பின்னரும் எந்தவிதமான பிரர்ச்சினையாக இருந்தாலும் தலைவரைத் தொடர்பு கொள்ளும் போது தகுந்த ஆலோசனை வழங்கிக் கொண்டிருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே
மேலும் வாட்ஸ் அப் குழுக்களில் கல்வி வேலைவாய்ப்பு (அரசு மற்றும் தனியார் துறை) , வர்த்தகம், திருமணத் தகவல் , பேராசியர்கள் , அரசு வேலைவாய்ப்பு தேர்வு பயிற்சி மையங்கள் ஒருங்கிணைப்பு போன்ற செயல் பாட்டிற்கு தனித்தனி வாட்ஸ் அப் குழுக்களுக்கு அட்மினாக இருக்கிறார்
இந்த சங்கத்தின் மற்ற நிர்வாகிகளில் டாகடர் அன்பழகனைப் பற்றி மருத்துவ உறவுகளுக்கும் மற்ற பொது மக்களுக்கும் எடுத்துரைக்க தேவையில்லை . சமுதாயம் சம்பந்தமான புரட்சிகர நிகழ்வுகளுக்கு முன் நிற்பவர். அவருடைய சகோதரர் மதிவாணனும் அவருக்கு நிகராக பணியாற்றக்கூடியவர்.
சங்க அவைத்தலைவர் திரு டிகேஆர் குருசாமி வனப் பாதுகாப்பு அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்று தற்சமயம் தொழில் அதிபராக இருப்பவர் பணமிருந்தாலும் செலவழிக்க மனமில்லாமல் இருப்பவர்கள் மத்தியில் ஓவ்வொரு நிகழ்வுகளுக்கும் தாராளமாக நிதி பங்களிப்பு செய்பவர் .
அவர் ஒவ்வொரு நிர்வாகக் குழு கூட்டத்திலும் இந்த இடம் போக்குவரத்திற்கு வசதியாக இருப்பதால் நமது மக்களுக்கு தங்கும் வசதியும் வேலைவாய்ப்பு குறிப்பாக ஐ.ஏ.எஸ் தேர்விற்கு பயிற்சிகள் வகுப்புகள் நடத்தவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருப்பவர்
சங்க பொருளாளர் திரு டி.கே.குமார் அவர்கள் இளம் முதல் தலைமுறை தொழில் அதிபர் தன்னுடைய கடுமையான உழைப்பால் தொழில் அதிபராக ஆனவர் . சங்க கட்டுமானப் பணிக்கான வரவு செலவு கணக்குகளை தனது அலுவலக கணக்காயர் மூலம் கணனியில் பராமரிப்பவர் . சங்க நிதியில் ஒவ்வொரு ரூபாயும் கணக்கில் கொண்டு சிக்கனமாக முறையான திட்டமிடுதலோடு செலவழிப்பவர்.
சங்கத்தின் மற்ற நிர்வாகிகளும் நிர்வாகக்குழு உறுப்பினர்களும் சங்க கட்டுமானப்பணியிலும் வளர்ச்சி திட்டங்களிலும் முழு ஈடுபாட்டுடன் செயல்படக்கூடியவர்கள்
ஆகவே இந்த நலத்திட்டங்களுக்கும் மற்றும் பல பொருளாதார வளர்ச்சி திட்டங்களுக்கும் இந்த நிர்வாகிகளின் காலத்திலே தேவையான கட்டமைப்பை(Infrastructure ) உருவாக்க உலகமெங்கும் பரந்து வாழும் தேவேந்திரகுல வேளாளர்கள் அனைவரும் தாராளமாக சங்க வங்கிக் கணக்கில் நிதிப் பங்களிப்பு செய்து இந்தக் கட்டிடப் பணி விரைவாக முடிக்க ஆதரவு தர வேண்டுகிறோம்.
இந்தக்கட்டடித்தில் வணிக வளாகம், குளிர் சாதன வசதியுடன் கூடிய நவீன திருமண மண்டபம், பயிற்சி மையம் , மூவேந்தர் யார் என்ற ஆராய்ச்சி நூலின் மூலம் நம்முடைய உண்மை வரலாற்றை உலகிற்கு கொண்டு வந்த “தேவ ஆசிர்வாதம்” அவர்கள் பெயரில் நூலகம் மற்றும் தேவைப்படுவோருக்கு குறைந்த வாடகையில் ஒரிரு நாள் தங்க நமது சமுதாயக் கொடியை உருவாக்கிய பாலசுந்தரராசு அவர்கள் பெயரில் தங்கும் விடுதி தமிழறிஞர் தேவநேய பாவாணர் பெயரில் பயிற்சி மையம் ஆகியவை அடங்கிய பல்நோக்கு கட்டிடமாக உரு வாக்க இருக்கிறோம். மேலும் இந்தக் கட்டிடத்தில் வரும் வருமானத்தில் ஏழை மாணவர்களின் திறனை வளர்த்துக் கொள்ளும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். சங்கத்தின் நிதி பங்களிப்பும் செலவினங்களும் வாட்சப் மற்றும் வலைத்தளங்கள் மூலம் அவ்வப்போது தெரிவித்து வெளிப்படைத்தன்மையுடன் செயல் படுகிறது என்பது அனைவரும் அறிந்ததே சங்கத்தின் வரவு செலவு கணக்குகள் நிதி பங்களித்தோர் மத்தியில் ஒரு திறந்த புத்தகமாக இருக்கும் என்று உறுதி அளிக்கிறோம் உலகமெங்கும் பரவி வாழும் தேவேந்திரர்களுக்கு பயன்படும் வீதம் கட்ட இருக்கும் தியாகி இமானுவேல் தேவேந்திரர் வளாகம் கூடிய விரைவில் கட்டி முடிக்க அனைவரும் நிதி பங்களிப்பு காசோலை மற்றும் வங்கி பண வர்த்தனை மூலம் வழங்கி ஆதரவு தர வேண்டுகிறோம்.
இதுவரை இந்த சங்கம் ஆற்றிய பணிகளுக்கு சங்க நிர்வாகிகள் யாரும் போக்குவரத்து செலவுக்கு கூட சங்கப் பணத்தில் எடுத்தது கிடையாது என்பது குறிப்பிட தகுந்தது . இதுவரை நடந்த நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்கள் அனைத்திற்கும் சங்க நிர்வாகிகளும் மற்ற நல விரும்பிகளின் நிதி பங்களிப்பு மூலம் தான் நடைபெற்றிருக்கிறது. என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறோம் . 26.01.2020 அன்று நடந்த அடிக்கல் நட்டு விழாவிற்கு மதிய உணவிற்கான செலவு அனைத்தையும் சங்க அவைத்தலைவர் திரு T.K.R குருசாமி அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள் மேலும் சங்க கட்டிட நிதியாக ரூபாய் ௫ 5 லட்சம் தருவதாக உறுதி அளித்த படி ரூபாய் லட்சம் மதிப்புள்ள ஜல்லி மணல் தந்துள்ளார்கள். மேலும் ஐந்து லட்சம் ரூபாய் வட்டியில்லா கடனாக கொடுப்பதாக உறுதி அளித்திருக்கிறார் . இவருடைய கொடை உள்ளத்திற்கு உலகமெங்கும் வாழும் தேவேந்திரர்கள் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இதுபோல் ஒவ்வொருவோரும் தங்கள் பங்களிப்பை அளித்தால் இந்த சமுதாயக் கட்டிடம் மிக குறுகிய காலத்தில் கட்டி முடிக்கப்படும் என்று உறுதி கூறுகிறோம்
சங்க நிர்வாகிகளின் கடந்த காலத்திலும் நிகழ் காலத்திலும் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிற சமுதாய சேவையை மனதில் கொண்டு உலகமெங்கும் மற்றும் தமிழகத்தில் வாழும் தேவேந்திர சொந்தங்கள் மற்றும் இந்த விழாவில் பங்கேற்றதின்போது பார்த்தத்திலும் சங்க பூமி பூஜை நடந்ததிலிருந்து இதுநாள் வரை நடந்த வேலைகளை சிலர் நேரிலும் பலர் வாட்சப் போன்ற வலைத்தளங்கள் மூலமாகும் பார்த்தத்திலும் சங்க நிர்வாகிகளின் செயல்பாட்டை நன்கு அறிந்திருப்பதால் உங்களுடைய தாராள நிதி மற்றும் ஆலோசனை பங்களிப்பு மூலம் இந்தக் கட்டிப் பணியை வெற்றிகரமாக கூடிய விரைவில் முடித்து விடுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இந்தக்கட்டடித்தில் வணிக வளாகம், குளிர் சாதன வசதியுடன் கூடிய நவீன திருமண மண்டபம், பயிற்சி மையம் , மூவேந்தர் யார் என்ற ஆராய்ச்சி நூலின் மூலம் நம்முடைய உண்மை வரலாற்றை உலகிற்கு கொண்டு வந்த “தேவ ஆசிர்வாதம்” அவர்கள் பெயரில் நூலகம் மற்றும் தேவைப்படுவோருக்கு குறைந்த வாடகையில் ஒரிரு நாள் தங்க நமது சமுதாயக் கொடியை உருவாக்கிய பாலசுந்தரராசு அவர்கள் பெயரில் தங்கும் விடுதி ஆகியவை அடங்கிய பல்நோக்கு கட்டிடமாக உரு வாக்க இருக்கிறோம். மேலும் இந்தக் கட்டிடத்தில் வரும் வருமானத்தில் ஏழை மாணவர்களின் திறனை வளர்த்துக் கொள்ள நிதி உதவி அளிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
சங்கத்தின் நிதி பங்களிப்பும் செலவினங்களும் வாட்சப் மற்றும் வலைத்தளங்கள் மூலம் அவ்வப்போது தெரிவித்து வெளிப்படைத்தன்மையுடன் செயல் படுத்தப்படும். சங்கத்தின் வரவு செலவு கணக்குகள் நிதி பங்களித்தோர் மத்தியில் ஒரு திறந்த புத்தகமாக இருக்கும் என்று உறுதி அளிக்கிறோம்
உலகமெங்கும் பரவி வாழும் தேவேந்திரர்களுக்கு பயன்படும் வீதம் கட்ட இருக்கும் தியாகி இமானுவேல் தேவேந்திரர் வளாகம் கூடிய விரைவில் கட்டி முடிக்க அனைவரும் நிதி பங்களிப்பு காசோலை மற்றும் வங்கி பண வர்த்தனை மூலம் வழங்கி ஆதரவு தர வேண்டுகிறோம்.
தங்கள் நிதி பங்களிப்பை சங்க வங்கி கணக்கில் செலுத்துமாறு வேண்டுகிறோம்
சங்க வங்கி கணக்கு
Devendrakula Nala Sangam - Tambaram
S/B Account No. 165701000027264
IFSC Code : IOBA0001657
Bank : Indian Overseas Bank
Branch : Vandalur Chennai 600048
காசோலையாகவும் தேவேந்திர குல நலச்சங்கம் - தாம்பரம் பெயரில் சங்க முகவரிக்கு அனுப்பிவைக்கலாம்
கூட்டு முயற்சி ! சமுதாய வளர்ச்சி !! ஒன்றுபட்டால் அனைவருக்கும் வாழ்வு !!!
நன்றிவணக்கம்
உங்கள் மேலான ஆதரவை நாடும்
பொறியாளர் செ.செல்லத்துரை தலைமைப் பொறியாளர்(ப.ஓ.)
சென்னைத்துறைமுகம்
தலைவர் தே. குல நலச்சங்கம்
9003070467
திரு டி.கே.ஆர் குருசாமி. அவைத் தலைவர்
9940161596
மருத்துவர்சு.அன்பழகன் இயக்குனர் முடநீக்கியல்துறை(ப.ஓ.) அரசு மருத்துவக்கல்லூரி சென்னை தலைவர் கட்டுமானக்குழு
9444456197, 9444553603
பொறியாளர் T.K குமார்
பொருளாளர் தே.குல நலச்சங்கம்
9444076783 ,
மருத்துவர் சு.மதிவாணன் தொழிலதிபர் பேராசிரியர்(ப.ஓ) அரசு சித்தா மருத்துவக்கல்லூரி சென்னை
செயலாளர் தே.குலநலச்சங்கம்
9444190044