Oct. 31, 2022, 11:20 a.m. chelladurai
30.10.2022 ஞாயிறு மாலை 5.00 மணியளவில் சென்னை மாவட்ட லயன்ஸ் கிளப் 324 J சார்பாக நாள் முழுவதும் சேவை திட்டம் அனுசரிக்கப்பட்டது.இந்த நிகழ்வில் அரிமா சங்க மாவட்ட ஆளுநர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் ஒவ்வொரும் பல்வேறு சமூகத்தைச் சார்ந்தவர்கள் ஓரளவு பெரிய அளவில் வியாபாரத் தொழில் செய்பவர்கள். ஏழை எளிய மக்களுக்கு சேவைக்காக ஒவ்வொரு ஆண்டும் லட்சக் கணக்கில் செலவு செய்பவர்கள்.
இந்த நிகழ்வில் நமது சமுதாயத்தைச் சார்ந்த கரும்பு ஜூஸ் போன்று பிளாட்பாரத்தில் வியாபாரம் செய்யும் 5 நபர்களுக்கு பெரிய நிழல் குடையும் தலா 5 கிலோ அரிசியும் 10 ஏழை பெண்களுக்கு தலா 5 கிலோ அரிசியும் ஒரு புடவையும் மேலும் 5 பேருக்கு தலா 5 கிலோ அரிசியும் வழங்கப்பட்டது
தாம்பரம் சங்கத்தலைவர் செ.செல்லத்துரை அவர்கள் குடும்பத்தினர் சார்பாக லயன்ஸ் கிளப் டயலலிஸ் மையத்திற்கு ஒரு சக்கர நாற்காலியும் மதிப்பு ரூ 18000 , நியாயங்கள் பயன்படுத்தும் 120 Nos under Pad ம் வழங்கப்பட்டது லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் நமது சங்கக் கட்டிடத்தில் அமைந்துள்ள மூதறிஞர் தேவ ஆசிர்வாதம் நூலகத்தை பார்வையிட்டு வெகுவாக பாராட்டினார்கள்
உறவுகளே! தாம்பரம் சங்கமானது ஏழ்மையில் வாழும் நமது மக்களுக்கு அவர்கள் வாழ்வில் முன்னேற்றம் அடைய முடிந்த அளவு உதவிகளைச் செய்யவும் நமது சமுதாயத்தை பொது சமூகத்தில் பேசுகிற அளவிற்கு எடுத்துச் செல்லும் வேலையும் செய்கிறது.
நமது சங்கக் கட்டிடம் கட்டி முடித்து ஒரளவு வருமானம் வர ஆரம்பித்து விட்டால் பல வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தலாம்
ஆகவே நமது உறவுகள் அனைவரும் ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் / அமைப்பு / சங்கம் / கிராமம் மூலம் தாராளமாக நிதிப் பங்களிப்பு செய்ய வேண்டுகிறோம்.
மேலும் சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் வசிக்கும் உறவுகள் லயன்ஸ் கிளப் ஆப் சென்னை தேவேந்திரர் நகர் ல் உறுப்பினராகலாம். உறுப்பினர் கட்டணம் ஆண்டிற்கு ரூ 7000 . லயன்ஸ் கிளப்பிற்கு ஆண்டிற்கு ரூ 7000 உறுப்பினர் கட்டணம் செலுத்த விருப்பம் உள்ளவர்கள் மட்டுமே உறுப்பினராக வேண்டும் . நம்முடைய வருமானத்தில் ஒரு பகுதியை சமுதாயத்தில் கீழ் மட்டத்தில் இருக்கிற மக்களுக்கு ஏதாவது பயனுள்ள வகையில் உதவிகள் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் வாழ வேண்டும்.