July 26, 2022, 12:49 p.m. chelladurai
இன்று 26.07.2022 நண்பகல் 12.00 மணியளவில் ஜூம் ஜூம், உணவகம் முதல் தளம், 2வது கடற்கரை சாலை, சீதகாதி நகர், கடற்கரை தொடர்வண்டி நிலையம் அருகில், சென்னைத் துறைமுகத்தில் திரு. இளந்திரையன், மூத்த தொழில் நுட்பவியலாளர் (தகுதி II) மின்சார பகுதி, இயந்திரவியல் துறை, 37 ஆண்டுகள் பணி நிறைவு பாராட்டு விழா, நம் சென்னை துறைமுக தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு சார்பில் நமது தாம்பரம் சங்கத் தலைவர் மற்றும் ஓய்வு பெற்ற தலைமைப் பொறியாளர் திரு செ.செல்லத்துரை அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
விழாவில் பணி ஓய்வு பெறும் திரு இளந்திரையன் அவர்களை வாழ்த்தியும் நமது சங்கத் தலைவர் பணியில் இருக்கும் போதும் ஓய்வு பெற்ற பின்னரும் துறைமுக தேவேந்திரகுல வேளாள உறவுகளுக்கு செய்த / செய்து கொண்டிருக்கிற உதவிகளையும் நினைவு கூறினர்.
விழாவின் போது நமது சங்க கட்டிட நிதிப்பங்களிப்பாக ஓய்வு பெற்ற இயந்திரவியல் கண்காணிப்பு பொறியாளர் திரு பெருமாள் அவர்கள் ரூ 5000 ( ஏற்கனவே ரூ 5000 பங்களிப்பு செய்திருக்கிறார் ) இளநிலைப் பொறியாளர் திரு A செல்வகுமார் ரூ 10,000 மும் திரு மாரிசாமி ரூ 5000 மும் வழங்கினர்