Contribution As on 07-07-2022

July 11, 2022, 6 a.m.   chelladurai  


இன்று 07.07.2022 வியாழக்கிழமை ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி வட்டம் நஞ்சை ஊத்துக்குளி பஞ்சாயத்து காங்கயம்பாளையம் கிராம தேவேந்திரகுல வேளாளர் சமுதாய மக்கள் சார்பாக சென்னையில் வசிக்கும் வேளச்சேரி சங்கத் தலைவர் கந்தசாமி BSNL ஓய்வு , திரு S.செல்வம் BSNL ஓய்வு மற்றும் சடையப்பன் PC ஆகியோர் சங்கக் கட்டிடப் பணியை பார்வையிட்டு முதல் தவணையாக ரூ 14000 நிதிப் பங்களிப்பு சங்கத் தலைவரிடம் வழங்கினர் . படத்தில் உடன் இருப்பவர்கள் சங்கத் துணைத்தலைவர் திரு. செல்வராஜ் , சங்க துணைச் செயலாளர் சின்னத்தம்பி மற்றும் டாஸ்மாக் லட்சுமணன்.

இது மாதிரி தமிழ் நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களின் சார்பாகவும் வெளி மாநில அமைப்புகள் சார்பாகவும் நமது சமுதாயத்திற்கு அடையாளச் சின்னமாக விளங்கும் தியாகி இமானுவேல் தேவேந்திரர் கட்டிடப்பணிக்காக நிதிப் பங்களிப்பு செய்து தரை மற்றும் முதல் தளத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர ஒத்துழைப்பு நல்குமாறு வேண்டுகிறோம்