April 1, 2022, 9:44 a.m. chelladurai
தேவேந்திரகுல வேளாளர் நலச்சங்கம் - தாம்பரம்
தமிழகத்தில் ஆண்ட / ஆண்டு கொண்டிருக்கிற திராவிட அரசுகளில் நமது தியாகியாருக்கு நினைவு மண்டபம் கட்ட கோரிக்கை வைத்து இதுவரை நிறைவேற்ற வில்லை என்ற அவலநிலையை போக்கும் விதமாக நமது மக்களின் நிதிப் பங்களிப்பால் ஒரு மாபெரும் நினைவுச் சின்னம் கட்டும் நோக்கோடு 26.01.2020 ல் அடிக்கல் நாட்டி இன்றைய 1.04 2022 நிலவரத்தை இந்தப் படத்தில் காண்கிறீர்கள். மேலும் 24.03.22 பதிவில் கூறப்பட்டுள்ள படி பல வேலைகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு வருகின்றன. இன்று 01.04. 22 ல் முதல்தளம் வெளிப்பூச்சு வேலை நடைபெறுவதை இந்தப் படத்தில் காண்கிறீர்கள் .
நமது மக்கள் இதுவரை ஆதரவு கொடுத்து வருவது போல் தொடர்ந்து தாராளமாக நிதிப் பங்களித்து தரைத் தளத்தையும் முதல் தளத்தையும் விரைவில் முடித்து பயன் பாட்டிற்கு கொண்டு வந்து இந்த சங்கம் சார்பாக பல நலத்திட்டங்களை செயல்படுத்த ஆதரவு தர வேண்டுகிறோம்.
அடிக்கல் நாட்டு விழா கல்வெட்டில் அழைப்பிதழில் பெயர் இடம்பெற்று கலந்து கொண்ட அரசியல் பிரமுகர்கள் நமது சமுதாயத்தில் விழாவில் கலந்து கொண்டு நிதிப் பங்களிப்பு வழங்கியோர் பெயர்கள் இடம் பெற்றிருக்கின்றன. மற்ற நிதிப் பங்களிப்போர் பெயர்கள் கல்வெட்டில் பொறிக்கும் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் ரூ 10000 மேல் பங்களித்தோர் ஒவ்வொருவர் பெயர் அவர்களிடம் தனி ஐடியில் தெரிவித்து பெயர் சரியாக உள்ளதா என்று உறுதிப்படுத்திய பிறகு கல்வெட்டில் பொறிக்கப்படும்.
இப்போதைக்கு ரூ 5 லட்சத்திற்கு மேல் நிதிப்பங்களித்தோர் பெயர் கல்வெட்டு தயாராகி வருகிறது.
ஒவ்வொரு பணியும் திட்டமிட்டு அனைவரது கூட்டு முயற்சியால் வெளிப்படைத் தன்மையுடன் கவனமாக செயல்படுத்தி வருகிறோம்
ஆகவே தொடர்ந்து ஆதரவு தரவேண்டுகிறோம்