சென்னை வண்டலூர் தேவேந்திரர் நகர் தியாகி இமானுவேல் தேவேந்திரர் வளாகம் கட்டிடப்பணி 24.03.2022 நிலவரம் . தயவு செய்து முழுவதும் படிக்கவும்

March 27, 2022, 3:15 p.m.   chelladurai  


சென்னை வண்டலூர் தேவேந்திரர் நகர் தியாகி இமானுவேல் தேவேந்திரர் வளாகம் கட்டிடப்பணி 24.03.2022 நிலவரம் . தயவு செய்து முழுவதும் படிக்கவும்

உறவுகளே தரைத்தளம் கிரானைட் பதிப்பு முடிந்து இறுதி முடியும் தருவாயில் ( Finishing touch ) இருக்கிறது. மின்சார கம்பிகள் இணைப்பு வேலை நடந்து கொண்டிருக்கிறது இன்னும் இரண்டு தினங்களில் முடிந்து விடும் .Wiring work is in progress . இந்த மின்சாரம் சம்பந்த வேலை செய்பவர் ஒரு தேவேந்திரர்.

திரு பொறியாளர் கருப்பையா பாளயங்கோட்டையிலிருந்து 38 விசிறிகள் தனது பங்களிப்பாக தருகிறேன் என்று உறுதியளித்திருக்கிறார். மின் விசிறி வந்தவுடன் பொருத்தப்படும்.

இது போல் 100 LED விளக்கு ஒரு உறவு தருகிறேன் என்று கூறியிருக்கிறார் .

அடுத்து பெயிண்டிங் அடிக்க வேண்டும் . பெயிண்ட் வாங்க வேண்டும் . நமது உறவு பெரிய பெயிண்ட் நிறுவனத்தில் மேலாளராக இருக்கிறார். அவர் பெயிண்ட் சலுகை விலையில் தருகிறேன் என்று கூறியிருக்கிறார் பெயிண்ட் வாங்கியவுடன் பெயிண்ட் அடிப்பதற்கு காரைக்குடியிலிருந்து ஒரு உறவு தனது பங்களிப்பாக பெயிண்ட் அடித்து தருவதாக கூறியிருக்கிறார்

முதல் தளத்தில் மணமேடைக்கு கிரானைட் பதிக்கும் வேலை நடைபெறுகிறது மதுரை தேவகி மருத்துவமனை மருத்துவர் நாகேந்திரன் அவர்கள் வழங்கிய பங்களிப்பால் முதல் தள தரைக்கு கிரானைட் வாங்குவதற்கு சங்க நிர்வாகிகள் 26.03.2022 சனிக்கிழமை பர்கூர் செல்கிறார்கள் . கிரானைட் அடுத்த வாரம் வந்தவுடன் பதிக்கும் வேலை தொடரும்

உறவுகளே முதல் தளத்தின் இப்போதைய நிலையை இந்த வீடியோவில் பாருங்கள் .

ஏற்கனவே கழிவறைகளுக்கு சுமார் ரூ 3 லட்சம் பெறுமான டைல்ஸ் வழங்கிய பன்னாட்டு நிறுவன மேலாளர் முதல் தளத்திற்கு பொய் கூரை ( False ceiling ) அமைக்க தன்னால் இயன்ற உதவி செய்வதாக கூறியிருக்கிறார்

அடுத்து கட்டிட ஆரம்ப காலத்தில் கூறிய படி முதன்முதலாக கட்டிடப் பணிக்கு சங்க நிர்வாகிகளின் மீது நம்பிக்கை வைத்து ரூ 5,01,001 பங்களிப்பு செய்த தங்கமலை அவர்களை பெயர் பொறித்த கல்வெட்டையும் இந்தப்பதிவில் படமாக இணைத்துள்ளோம்.

இது மாதிரி கல்வெட்டுக்களும் அடுத்தடுத்து தயாராகும் .

உறவுகளே ரூபாய் ஐந்து லட்சம் பங்களிப்பு செய்தால் வருடம் ஒரு நாள் மண்டபத்தை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம் அல்லது வாடகையை பணமாக பெற்றுக் கொள்ளலாம். ஒரு ஏ.சி அறை மாதம் இரண்டு நாள் கட்டணமில்லாமல் தங்கிக் கொள்ளலாம் . ஆகவே உறவுகளே வசதி வாய்ப்பு இருக்கிறவர்கள் தாராளமாக ரூபாய் ஐந்து லட்சம் நிதிப்பங்களிப்பு செய்தால் தரைத்தளம் மற்றும் முதல் தளத்தையும் விரைவில் முடித்து இரண்டாவது தளத்தையும் ஆரம்பித்து விடலாம் .

இதைத் தொடர்ந்து ரூபாய் பத்தாயிரத்திலிருந்து பங்களிப்பு செய்தவர்களின் பெயர்கள் கல்வெட்டில் பதிவிடும் வேலை நடைபெறும் . இந்தக் கல்வெட்டு வேலை செய்பவரும் நமது தேவேந்திரர் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்

சென்னை நுழைவு வாயில் நமது சமுதாயத்திற்கு பல்வேறு வகையில் பயனுள்ளதாகவும் ஒரு அடையாளச் சின்னமாகவும் விளங்கக் கூடிய இந்தக் கட்டிடப் பணிக்கு தனிப்பட்ட முறையிலோ , கூட்டு முயற்சியிலோ ஒவ்வொரு கிராமம் மூலமாகவோ தொடர்ந்து குறைந்த பட்சம் ரூ 1000 லிருந்து தங்களால் முடிந்த நிதிப் பங்களிப்பை தாமதிக்காமல் உடனடியாக சங்க வங்கிக் கணக்கில் செலுத்துமாறு வேண்டுகிறோம் .

சங்க வங்கி கணக்கு விபரம்.:- Devendrakula Nala Sangam - Tambaram S/B Account No.:- 165701000027264 IFSC Code :-IOBA0001657 Bank : Indian Overseas Bank Branch : Vandalur Chennai - 600048

வங்கியில் பணம் செலுத்தியதும் தகவல் தெரிவிக்கவும்

Er. செ.செல்லத்துரை தலைவர் 9003070467 மரு.சு.மதிவாணன் செயலாளர் 944419004 Er. முனைவர் டி.கே.குமார் பொருளாளர் 944407683