March 9, 2020, 1:23 a.m. chelladurai
அன்பார்ந்த தேவேந்திர உறவுகளே வணக்கம்!
சென்னை நுழைவு வாயில் வண்டலூர் தேவேந்திர நகரில் அமையவிருக்கிற தியாகியார் இமானுவேல் தேவேந்திரர் வளாக கட்டிடப் பணி இன்றைய 07. 3.2020 நிலவரம்
நிதி பங்களிப்பு 24.02.2020 அன்று ஓமனில் பணிபுரியும் ராஜபாளையம் அயன் கொல்லங்கொண்டான் கிராமத்தைச் சார்ந்தவரும் சென்னை MITயில் படித்தவருமான அருமைத் தம்பி தங்கமலை ரூபாய் ஐந்துலடசத்து ஓராயிரத்து ஒன்று சங்க வங்கிக் கணக்கில் செலுத்தியிருக்கிறார் . அவருக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் அவர் பணம் செலுத்த தூண்டுகோலாக இருந்த DKV DMITian வெள்ளப் பாண்டி மற்றும் அவரது நண்பர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இது போல் மேலும் பல உறவுகள் முன்வந்தால் இந்தக் கட்டிடப் பணி விரைவாக முடிவடையும் .
மேலும் தேவேந்திரர் நகர் மனை எண் 36 ல் வசிக்கும் ச. முருகேசன் சங்கத் துணைத் தலைவர்அ ஆயுள் உறுப்பினர் கட்டணமாக ரூபாய் 10000 07.03.2020 மற்றும் மறைமலை நகரில் வசிக்கும் நயினார் ஆயுள் சந்தாவின் முதல் தவணையாக ரூபாய் 1000 மும் வழங்கினார்கள்.
மேலும் இதுவரை 5 உறவுகள் தலா ரூபாய் 100 வங்கியில் செலுத்தியிருக்கிறார்கள் . அவர்களுடைய பொருளாதார சிரமங்களில் தங்களால் முடிந்ததை செய்ய வேண்டும் என்ற மனதை பாராட்டுகிறோம்.
நிதிப் பங்களிப்பு செய்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி.
சங்க அவைத்தலைவர் திரு டிகேஆர் குருசாமி அவர்கள் தாங்கள் கொடுத்த வாக்குறுதியின் படி தேவையான M sand மற்றும் ஜல்லி தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
மேலும் வேலை தடையின்றி தொடர உடனடியாக 1000 மூட்டை சிமெண்ட் தேவைப்படுகிறது.
இன்று லேபர் கூலியாக ரூபாய் 74,800க்கு செக் வழங்கப்பட்டது.
நாளை 08.03.2020 ராம்கோ சூப்பர் கிரீட் என்ற சிமெண்டிற்கு 450 மூட்டை ஒன்றிருக்கு ரூபாய் 350 க்கு பேக்டரிக்கு நேரிடையாக பணம் செலுத்தப்பட இருக்கிறது
அருமை சொந்தங்களே!
தியாகி இமானுவேல் தேவேந்திர வளாகம் கட்டிட நிதியாக பங்களிப்பானது வணிக ரீதியாக முதலீடு செய்யவும் அதே சமயத்தில் வருகிற வருமானம் ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்யும் நோக்குடன் வடிவமைக்கப்பட்டுள்ளது .
அதாவது இந்த சங்கத்திற்கு வருமானவரி சலுகை பெற நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வருமான வரிச்சலுகை பெற்றுவிட்டால் வருகிற வருமானத்தில் 85 சதவீதம் மக்கள் நலனுக்காக செலவிடவேண்டும் . லாப நோக்கம் கூடாது. ஆகவே லாபத்தில் பங்கு கிடைக்காது.
அதே நேரத்தில் குறைந்தது ரூபாய் ஐந்து லட்சம் முதலீடு செய்பவர்களுக்கு வருடத்தில் ஒரு சுபநிகழ்ச்சி நடத்த மண்டபம் இலவசமாக கொடுக்கப்படும். அப்படி இலவசமாக பயன்படுத்தும் போது அவர்களுக்கு வேண்டியவர்களுக்கு கொடுத்தால் மண்டப வாடகை குறைந்தது ரூபாய் இரண்டரை லட்சம் முதலீடு செய்தவருக்கு கிடைத்துவிடும் . ஐந்து லட்சம் முதலீட்டில் வருடம் இரண்டரை லட்சம் வருமானம் கொடுக்கும் வர்த்தகம் கிடைக்க கூடிய தொழில் எதாவது இருக்கிறதா சிந்தித்து பாருங்கள் . ஆனால் அதே சமயத்தில் முதலீட்டார்களுக்கு வழங்கிய சலுகை போக அதிகமான வருமானம் கிடைக்கும். இந்த வருமானம் முழுவதும் நமது சமுதாய ஏழை மாணவர்கள் கல்வி முன்னேற்றத்திற்காக செலவிடப்படும்.
நமது மக்கள் வேலை வாய்ப்பு பயிற்சி மற்றும் பொருளாதார முன்னேற்றம் சம்பந்தமாக மாதம் தோறும் கூட்டங்கள் மற்றும் கருத்தரங்குகள் நடத்தப்படும்.
இங்கு தேக்கம்பட்டி பாலசுந்தரனார் பெயரில் நூலகம் அமைக்கப்படும் . நூலகத்திற்கு தேவையான Racks மற்றும் மத்திய குடியுரிமைப் பயிற்சிக்கு (ஐ.ஏ.எஸ்) தேவையான அனைத்து தரம் வாய்ந்த புத்தகங்களையும் வழங்க சமுதாய பற்றுள்ள தமிழக அரசு உயர் அதிகாரி 26.01.2020 விழாவில் உறுதி அளித்திருக்கிறார்
வெளியூர்களிலிருந்து சென்னைக்கு கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் தொழில் சம்பந்தமாக வருபவர்களுக்கு குறைந்த வாடகையில் தங்குமிடம் கிடைக்கும்.
இந்த வளாக நுழைவு வாயிலில் நமது தெய்வம் இந்திரன் சிலையும் வளாகத்தில் தியாகி இமானுவேல் தேவேந்திரரின் முழு உருவ வெண்கலச் சிலையும் நிறுவப்படும். வெண்கலச் சிலையை தொழில் அதிபர் பல்லாவரம் அர்ஜுனன் வழங்க உறுதியளித்திருக்கிறார்.
மற்ற விபரங்கள் அனைத்து Brouchure ல் இடம் பெற்றுள்ளது .ஆகவே இந்த brochure யை மீண்டும் ஒருமுறை படித்துவிட்டு சந்தேகங்கள் எதாவது இருப்பின் சங்க நிர்வாகிகளை தொடர்பு கொண்டு கேட்கலாம்
ரூபாய் ஐந்து லட்சம் வரை முதலீடு செய்ய முடியாதவர்கள் சமுதாய வளர்ச்சிக்காக நிதி பங்களிப்பு வழங்க வேண்டுகிறோம் சென்னையில் இமானுவேல் தேவேந்திரருக்கு மணிமண்டபமாகவும் தேவேந்திரனுக்கு கோயிலாகவும் விளங்கும் கட்டிடத்திற்கு நிதி பங்களிப்பு அளிக்க வேண்டுகிறோம்
இன்றைய நிலையில் சங்க வைப்பு நிதியிலிருந்து செலவழித்துக் கொண்டிருக்கிறோம் நிதி பங்களிப்பு இல்லாமை தொடருமானால் இருக்கிற நிதியிலிருந்து தரைத் தளம் மட்டுமே முடிக்க முடியும்
ஆகவே அமைப்பு மற்றும் அரசியல் கட்சிகள் பாகுபாடின்றி அனைத்து தேவேந்திர உறவுகள் குறிப்பாக வசதி வாய்ப்பு உள்ளவர்கள் ரூபாய்5லட்சத்திற்கு மேல் வணிக ரீதியாக முதலீடு* செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
வாய்ப்புள்ளவர்கள் கட்டிடம் பணியை நேரில் வந்து பார்வையிடலாம். நேரில் பார்வையிட்டு மற்ற உறவுகளுக்கு தெரிவிக்கலாம் . இந்தப் பணியை மற்ற தேவேந்திர உறவு குழுக்களில் மறு பதிவு செய்யவும். மறு பதிவு செய்யும் மறந்திராமல் Brouchure யையும் இணைக்கவும்.
இந்தக் கட்டிட நிதிக்காக பணம் வசூலிக்க தனிப்பட்ட முறையில் இதுவரை யாருக்கும் அதிகாரம் வழங்கப்பட வில்லை. விருப்பம் உள்ளவர்கள் சங்க வங்கிக் கணக்கில் பணம் செலுத்துமாறு வேண்டுகிறோம். கிராமங்களில் கோவில் திருவிழாவிற்கு வரிவசூல் செய்வது போல் வரிபோட்டு கிராமங்கள் சார்பாக சங்க வங்கி கணக்கில் பணத்தை செலுத்தி விடலாம். எதாவது விளக்கம் தேவைப் பட்டால் கீழே கொடுக்கப்பட்டுள்ள சங்க நிர்வாகிகளை தொடர்பு கொள்ளலாம். தேவைப்பட்டால் நிதி பங்களிப்போரை நேரடியாக சந்திக்க நிர்வாகிகள் தயாராக இருக்கிறார்கள்
நன்றி வாழ்த்துக்கள்
செ.செல்லத்துரை தலைவர் 9003070467 டி.கே.குருசாமி அவைத்தலைவர் 9940161596 சு.அன்பழகன் தலைவர் கட்டிட பணிக்குழு 9444553603 சு.மதிவாணன் செயலாளர் 9444190044 டி.கே குமார் பொருளாளர் 7338866783