March 8, 2020, 4:58 a.m. chelladurai
வணக்கம் தேவேந்திர குல உறவுகளுக்கு.
அறியாமையால் பிரிந்து கிடக்கும் நமது கிராமம்
நமது கிராமம் பல சமுகம் வாழும் சிறிய ஊர் அதில் நமது சமுகம் நூற்றி பத்து வரி (குடும்பம்) உள்ள சிறிய கிராமம் அங்கே வருசம் தவறாமல் நடைபெரும் சமூக மாரியம்மன் கோவில் கொடைவிழா சிறப்பு ஒளி ஒலி அமைப்புகள் அலங்காரங்கள் கோவிலை சுற்றி தலைவர்களின் கட்டவுட்டுகள் விளம்பர சுவரொட்டிகள் அதேபோல் இளைஞர்களின் ரசனைக்குரிய நடிகர்களின் படங்களுடன் தங்களின் புகைப்படம் சேர்ந்த விளம்பர பேனர்கள் என திருவிழா கோலாகலமாக ஒவ்வொரு ஆண்டும் நடந்து வருகிறது கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த திருவிழாபோல் அல்லாமல் இப்போது சச்சரவுகள் அதிகமாகி கொண்டுவரும் கொடைவிழாவை தான் காண முடிக்கிறது ஒவ்வொரு ஆண்டும் கொடைவிழா நடக்கும் அதில் மாற்றம் இல்லை ஆனால் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விழாக்கள் போல் இப்போது இல்லை என்பது வருந்ததக்கது அதாவது கடந்த எட்டு ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வருட கொடைவிழா எப்போதும் போல் செழிப்பாக நடந்து கொண்டிருந்தது ஒரு இரவில் கரகாட்டம் நடந்து கொண்டிருக்கையில் நான்கைந்து விடலை பசங்க கரகாட்டம் ஆடுபவரிடம் சென்று இமானுவேல் அவர்களை புகழ்ந்து பாட வலியுறுத்தவும் ஆட்டக்காரர் அவ்வாறு புகழ்ந்து பாடிக்கொண்டிருந்த வேளையில் அங்கே வேடிக்கை பார்த்து கொண்டிருந்த மறவர் சமூக மக்கள் எழுந்து சென்று விட்டனர் ஆயினும் நிகழ்ச்சி நடந்தது கொண்டிருந்த வேளையில் சில விடலை பசங்க தளபதி ஜான்பாண்டியரை புகழ்ந்து பாட சொல்ல வேடிக்கை பார்க்கவந்த இன்னொரு சமுகமும் இடத்தை காலி செய்தது அடுத்து இன்னும் சில விடலையர் டாக்டர் கிருஷ்ணசாமி யை புகழ்ந்து பாட சொல்ல அங்கிருந்த மற்ற சமூக மக்கள் அனைவரும் எழுந்து சென்றுவிட்டனர் இன்னும் நான்கைந்து வாலிபர்கள் பசுபதியாரை புகழ்ந்து பாட சொல்ல இன்னும் ஒரு குரூப் நடிகர் களை புகழ்ந்து பாட சொல்ல ஒரே களேபரமாக கரகாட்ட நிகழ்ச்சிச்சி நிறுத்தப்பட்டது..
(இதில் குறிப்பிட வேண்டிய முக்கிய செய்தி அன்று இளைஞ்ர்களில் பலர் மது (பீர்)குடித்து இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது)
பீர் குடித்தால் உடலுக்கு நல்லது என்று யாரும் சொன்னார்களா தெரியவில்லை.?
...சிறிது நேரத்திற்கு பிறகு பெரியவர்கள் கறாராக யாரையும் புகழ்ந்து பாட கூடாது என்றும் எப்போதும் போல் அம்மன் பாடல்கள் பாடி ஆடவேண்டும் என சொல்லப்பட்டு சமாதானம் செய்து அதன்படி கரகாட்ட நிகழ்ச்சி நிறைவு பெற்றது அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் இது வாடிக்கையாக தொடர்கிறது.... ஆயினும் வருசம் தவறாமல் மாரியம்மனுக்கு கொடைவிழா நடக்கிறது அன்று தொடங்கிய ஒரு சமுகத்து பிரிவு இன்றும் தொடர்கிறது ஆனாலும் இதில் சிறப்பு என்னவென்றால் கொடை விழாவாகட்டும் அல்லது அம்மனுக்கு சூரை கொடுத்தல் நிகழ்ச்சியாகட்டம் அல்லது பொங்கல் விழாவாகட்டும் வருசம் தவறாமல் நடந்து கொண்டு இருக்கிறது இதில் சிந்திக்க வேண்டிய இளைஞர்கள் தாம் கொண்ட தலைவர் நடிகர் என்பவற்றில் பிடிவாதமாக இருக்கிறார்கள்
அநேகமாக நமது சமூக தலைவர்கள்
(வெளிப்பார்வையில் உள்ளுக்குள் அவர்களுக்குள் என்ன இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை)
அவரவர் பங்கிற்கு சமூக தொன்றாற்றி கொண்டு இருப்பதாக அறிய முடிகிறது அந்தவகையில் ஏதோ ஒருவகையில் தலைவர்கள் சமூக ம் சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்து போராடி கொண்டிருக்கிறார்கள் நாம் தான் அதை சரியாக புரிந்து கொள்ளாமல் எனது தலைவர் பெரியவர் என்று சிலரும்
இல்லை எனது தலைவரே சிறந்தவர் என்று சிலரும்
இல்லை எனது தலைவர் உண்மையானவர் சமூகத்திற்காக தன்னை அர்ப்பணித்து கொண்டவர் என்று ஆளாளுக்கு பிரிந்து கிடக்கிறோம் அந்த வகையில் எனது கிராமம் அறியாமையினால் பிரிந்தும் சமூக பொது விழாக்களில் சேர்ந்து ஏதோ ஒரு காரணங்களில் சின்ன சின்ன சச்சரவுகளில் சரியாக புரிந்து கொள்ளாமல் பிரிந்து ஊரில் சேர்ந்து வாழ்கிறோம் இது போன்ற சின்ன சின்ன விசயங்களை களைந்து புரிந்து கொண்டால் நாளை நாம் அரசுக்கு வைக்கும் கோரிக்கைகள் கண்டிப்பாக நிறைவேறும் எடுத்து காட்டாக எனது கிராமத்தை சொன்னாலும் இதே நிலைதான் நமது சமூகம் வசிக்கும் அனைத்து ஊர்களிலும் என்பதை நாம் புரிந்துகொள்ள வெண்டும் நாம் புரிந்து கொள்வது எப்படி அவசியமோ அதே நிலைதான் சமுகம் சார்ந்த அனைத்து தலைவர்களுக்கும் என்பதை நினைவுகூர்ந்து நிறைவு செய்கிறேன் .
நான் நெல்லை சுகணேசன்.
நன்றி...🙏🏼